பாகிஸ்தானில் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறும் என பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணைய அதிகாரிகள் பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் அல்வியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதன் பின்னர் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த சில வருடங்களில் பாகிஸ்தான் அரசாங்கம் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டிருந்த நிலையில். பொதுத் தேர்தல் தாமதமாக்கப்பட்டது.
அப்போதைய பிரதமராக இருந்த ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசாங்கம் நாடாளுமன்றத்தை கடந்த ஆகஸ்ட் 9ஆம் திகதி கலைத்தது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட 90 நாட்களில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி பலரும் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து தொகுதிகளை உறுதிப்படுத்தும் பணி எதிர்வரும் ஜனவரி 29ஆம் திகதிக்குள் நிறைவடையும் எனவும் இதனைத் தொடர்ந்து எதிர்வரும் பெப்ரவரி 11-ம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது,
பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான் அரசாங்கம்; நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் தோற்கடிக்கப்பட்டு ஷபாஸ் ஷெரீப் தலைமையில் கூட்டணி அரசாங்கம் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.