புதிய இணைப்பு
காசாவின் தென்பகுதியில் இஸ்ரேலிய விமான தாக்குதலில் பாலஸ்தீன தொலைக்காட்சியின் மூத்த நிருபரான முகமது அபு ஹதாப் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 11 பேரும் கொல்லப்பட்டுள்ளார்.
நேற்று (03.11.2023) வெள்ளிக்கிழமை இரவு தெற்கு காசாவின் கான் யூனிஸில் அமைந்திருந்த ஊடகவியலாளரின் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
அவரது மரணம் அவரது சக ஊடகவியலாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தனது சகா கொல்லப்பட்ட செய்தியை வாசித்த அறிவிப்பாளர் சல்மான் அல் பசீர் கண்ணீர்விட்டு அழுதுள்ளார்.
பாரிய அழிவு
நாங்கள் ஒருவர் பின்ஒருவராக உயிரிழக்கின்றோம் எங்களை பற்றியே காசா மீது கட்ட விழ்த்து விடப்பட்டுள்ள பாரிய அழிவு குறித்தோ எவருக்கும் கவலையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் 7 ஆம் திகதி காசா மீதான இஸ்ரேலியப் போரின் தொடக்கத்திலிருந்து கொல்லப்பட்ட 31 வது பாலஸ்தீன பத்திரிகையாளர் அபு ஹத்தாப் ஆவார் என தெரிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
ஹமாஸ் அமைப்பினருடன் தொடர்புடையதாக கருதப்படும் பல சேனல்களுக்கு சமூகவலைத் தளமான டெலிகிராம் (Telegram) தடை விதித்துள்ளது.
குறித்த தகவலை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
சமூகவலைத் தளம்
மேலும், உத்தியோகபூர்வ ஹமாஸ் கணக்கு, அதன் ஆயுதப் பிரிவின் கணக்கு, கஸாம் படையணி மற்றும் Gaza Now செய்தி கணக்கு ஆகியவை கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, கடந்த வாரம் முதல் Google Play அல்லது Apple app store இல் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட டெலிகிராம் பதிப்புகளுக்கு இந்தக் கணக்குகள் வழங்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.