Loading...
நடிகர் ரஜினிகாந்த்தை அ.தி.மு.க. எம்.எல்.ஏ கருணாஸ் திடீரென சந்தித்துப் பேசியுள்ளார்.
முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவரான நடிகர் கருணாஸ், அ.தி.மு.க சார்பில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு திருவாடனை தொகுதியில் வெற்றிபெற்றார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், சசிகலா- பன்னீர்செல்வம் என இரண்டு அணியாக அ.தி.மு.க பிரிந்தது. சசிகலா அணியில் கருணாஸ் இருந்துவருகிறார்.
Loading...
இந்த நிலையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு இன்று காலை திடீரென வந்தார் கருணாஸ். ரஜினியுடன் அவர் நீண்ட நேரம் பேசினார். இந்தச் சந்திப்புகுறித்த காரணம் எதுவும் இதுவரை தெரியவில்லை.
Loading...