முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க எதிர்காலத்தில் பலம் வாய்ந்த சக்தியுடன் இணைந்து செயற்படுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் அக்மீமன தொகுதியின் பிரதம அமைப்பாளரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே விஜயபால ஹெட்டியாராச்சி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஆதரவளித்தால் மக்கள் சக்தியும் அதற்கு ஆதரவளிக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.
சந்திரிக்காவின் பிரவேசம்
மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்குவதற்கு செயற்பட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா எதிர்காலத்தில் ஒரு சக்தி வாய்ந்த கட்சியுடன் இணைந்து அந்த சக்தியை பலப்படுத்த பாடுபடுவார்.
சந்திரிக்கா தனது குடும்பத்தை ராஜபக்ச குடும்பத்தைப் போன்று ஊழல் மோசடியாக மாற்றவில்லை. சந்திரிக்கா அரசியலுக்கு வருவதை நாங்கள் விரும்புகிறோம்.
மக்கள் சக்தி
முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் மக்கள் சக்தி நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஆதரவளிக்க விரும்புகின்றது.
சந்திரிக்கா மைத்திரிபாலவுடன் அல்லது அரச கட்சிகளுடன் இணைந்து அரசியல் செய்வார் என்று நாங்கள் நம்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.