Loading...
தர்பூசணி நமது உடலுக்குக் குளிச்சியை தருவதுடன் மட்டுமில்லாமல் அனைத்து வகையான உடல் மற்றும் சருமப் பிரச்சனைகளை விரட்டியடிக்கும் ஆற்றலையும் கொண்டுள்ளது.
எனவே இப்போது தர்பூசணி மூலம் கிடைக்கும் ஆரோக்கியம் மற்றும் அழகிற்கான குறிப்புகளை பற்றி பார்ப்போம்.
Loading...
தர்பூசணி மூலம் கிடைக்கும் நன்மைகள்
- 1/2 கப் தர்பூசணிச் சாறு , கடலை மாவு மற்றும் 2 தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் தூள், ஆகிய அனைத்தையும் கலந்து, அதை நமது உடம்பின் பாதம் முதல் உச்சிவரை 5 நிமிடங்கள் மிருதுவாக மசாஜ் செய்து குளிக்க வேண்டும். இதனால் நமது உடல் உஷ்ணம் குறையும்.
- முகத்தின் மாசுக்களை நீக்குவதற்கு, 1/2 கப் ஓட்ஸ் பவுடர், 1 கப் தர்பூசணிச் சாறு, 2 சிட்டிகை பச்சைக் கற்பூரம் பவுடர் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக அரைத்து முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும்.
- வியர்வை துர்நாற்றம் நீங்குவதற்கு, 3 கிராம் வெட்டிவேர், ரோஜா இதழ்கள், வேப்பந்தளிர், வெந்தயத் தூள், பூலாங்கிழங்கு, தர்பூசணிச் சாறு ஆகியவற்றை சம அளவு எடுத்து நன்றாக அரைத்து வியர்வை அதிகம் வெளியேறும் பகுதிகளில் தடவி, காய்ந்ததும் குளிக்க வேண்டும்.
- வெள்ளரிக்காய், தர்பூசணி, பால் பவுடர் ஆகியவற்றைச் ஒன்றாக சேர்த்து நன்றாக அரைத்து, அதை கண்களைச் சுற்றி பேக் போட்டு. 10 நிமிடங்கள் கழித்து கழுவினால், வெயிலால் ஏற்படும் கண் எரிச்சல் நீங்கி, புத்துணர்வை உணரலாம்.
- இளநீர், தர்பூசணிச் சாறு, கஸ்தூரி மஞ்சள் ஆகியவை கலந்த பேஸ்ட்டை கால், முழங்கை, கழுத்துப் பகுதிகளில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவினால் கருமை மறையும்.
- புதினா இலைப் பொடியுடன் தர்பூசணி சாறு சேர்த்து முகத்தில் பேக் போட்டு பின் ஐஸ் கட்டியை ஒரு துணியில் சுற்றி முகத்தில் ஒற்றியெடுத்தால், முகத்தில் உள்ள பருக்கள், கரும்புள்ளிகள் நீங்கும்.
Loading...