Loading...
தமக்கு ஒதுக்கப்பட்ட கடமைகளுக்குப் புறம்பாக வேறு நடவடிக்கைகளில் ஈடுபடும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் சேவையை ஒழுக்காற்று விசாரணையின் பின்னர் இடைநிறுத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
நிறுவனங்களுடன் இணைக்கப்பட்ட சிவில் பாதுகாப்பு உறுப்பினர்கள் அந்தக் கடமைகளில் இருந்து விலகி வேறு நடவடிக்கையில் ஈடுபட்டார்களை என்பதைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Loading...
சிவில் பாதுகாப்பு பணிப்பாளர் நாயகம் ரொஷான் பியன்விலவிற்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
Loading...