இலங்கையின் போர்க்குற்ற செயற்பாடுகளை மேம்படுத்தி, இயல்பு நிலையை உருவாக்க அமெரிக்காவால் தொழிநுட்பரீதியான உதவிகள் வழங்கப்பட்டுள்ளதோடு, உலகின் ஒவ்வொரு தனிமனிதரது உரிமையை பாதுகாக்கவும் சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் அமெரிக்கா ஒன்றித்த செயற்பாட்டை வெளிப்படுத்துமென தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்பின் நிர்வாகம், இலங்கை போர்க்குற்றம் தொடர்பான தனது நிலைப்பாட்டை, இன்று ஐநாவின் சர்வதேச மனித உரிமை ஆணைக்குழுவின் 34 ஆவது கூட்டத்தொடரில் வெளிப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஐநாவிற்கான உதவி இராஜாங்க செயலாளர் எரின் பார்கிலே, இலங்கையின் போர்க்குற்ற மீறல்களை மேம்படுத்தி இயல்பு நிலையை உருவாக்க அமெரிக்காவால் தொழிநுட்ப ரீதியான உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், சர்வதேச மனித உரிமை ஆணைக்குழு எப்போது முழுமையாக இயங்கத் தொடங்கி, உறுதிமொழிகள் மற்றும் கடமைகளை நினைவூட்டுகின்றதோ, அச்சூழலியே சாதகமான பெறுபேறுகள் கிடைக்கப்பெறும் எனக்கூறியுள்ளார்.
மேலும் சர்வதேச மனித உரிமைகள் ஆணையம், பக்கச்சார்பற்ற செயற்பாடுகளை வெளிப்படுத்துமிடத்தில், பொறுப்புகள் மேலோங்கியுள்ள ஆணையத்தின் செயற்பாட்டை மேலும் பலமுடையதாக்குமென தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுள்ள நிலையில், இலங்கை உள்ளிட்ட போர்குற்ற வெளிப்படுத்தப்பட்டுள்ள நாடுகளின் மனித உரிமை செயற்பாடுகள் குறித்து எரின் பார்கிலே கருத்து வெளியிட்டுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
அத்தோடு உலக நாடுகளிலுள்ள ஒவ்வொரு தனிமனிதரது உரிமையை பாதுகாக்கவும், பாதுகாப்பை பலப்படுத்தவும், சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் அமெரிக்கா கைகோர்த்திருக்கும் என்பதோடு, ஆணையத்தின் ஸ்திரமான செயற்பாடுகளில் அவதானத்துடன் செயற்படும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.