மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட புதிய சட்டமூலம் உருவாக்கப்பட்டு வருவதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப்ப பாஸ்குவல் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் குறித்த சட்டமூலம் தீவிரமாக உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாற்றுத்திறனாளி குடிமக்கள் குறித்து அவதானம்
‘நிலையான நாட்டிற்கான கூட்டுப் பாதை’ என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக அமையத்தில் நேற்றைய தினம் (08.11.2023) ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.
இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை மாற்றுத்திறனாளி குடிமக்கள் இனி ஒரு சார்பு மக்களாகக் கருதப்படாமல், அவர்கள் இரண்டாம் தர நிலைக்கு தள்ளப்படாமல், சமமான குடிமக்களாக கருதப்பட வேண்டும் என்பதை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டையும் இராஜாங்க அமைச்சர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.