சபரகமுவ மாகாணத்தின் அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 13ஆம் திகதி விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இவ்வாறு தமிழ் மொழி பாடசாலைகளுககு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விசேட விடுமுறை
இவ்வருடம் தீபாவளி பண்டிகையானது ஞாயிற்றுக் கிழமை வருவதால், அதற்கு மறுதினமான 13ஆம் திகதி திங்கட்கிழமை குறித்த விடுமுறையை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சபரகமுவ மாகாணத்தின் அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும், எதிர்வரும் 13ஆம் திகதி வழங்கப்படும் விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் 18ஆம் திகதி பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வடக்கு – கிழக்கில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை விடுமுறை வழங்க வேண்டும் என வடமாகாணத் தமிழாசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.