“ரணில் – ராஜபக்ச அரசு இனியும் ஆட்சியில் தொடர மக்கள் அனுமதிக்கக்கூடாது. இந்த அரசை விரட்டியடிக்க மக்கள் அனைவரும் தேசிய மக்கள் சக்தியின் பின்னால் அணிதிரள வேண்டும். புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களும் தேசிய மக்கள் சக்தியின் கரங்களைப் பலப்படுத்த வேண்டும்.” என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
ஊழல்
அவர் மேலும் கூறுகையில், “ராஜபக்சக்களை பாதுகாக்கும் நோக்குடன் ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்த ரணில் விக்ரமசிங்க இன்று செய்வதறியாது திக்குமுக்காடுகின்றார்.
அரசியலிலும், விளையாட்டிலும் ஊழல், மோசடியாளர்களை பாதுகாக்க முற்படும் ரணில், தானும் ஒரு ஊழல்,மோசடியாளன் என்பதை மறந்துவிட்டார் போல்.
ரணில் – ராஜபக்ச அரசை விரட்டியடிக்க அனைத்து மக்களும் தேசிய மக்கள் சக்தியின் பின்னால் அணிதிரள வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.