வாழ்வில் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் இன்று தீபத்திருநாளை கொண்டாடுகின்றனர்.
தீபம் என்றால் “விளக்கு” “ஆவளி” என்றால் “வரிசை” என்று அர்த்தம். அதாவது விளக்குகளை வரிசையாக ஏற்றி ஒளியினால் கடவுளை வழிபடும் அந்த புண்ணிய நாளினை தான் தீபாவளி என்று சொல்கிறோம்.
ஒரே விளக்கு ஏனைய விளக்குகளை ஒளிரச் செய்யும். அந்த முதல் ஒளியே பரமாத்மா, அதனால் ஒளி பெறும் மற்ற விளக்குகள் ஜீவாத்மாக்கள், ஜீவராசிகள் எல்லாவற்றிற்கும் பரம்பொருளே ஆதார ஒளியாகும். இதை உணர்த்தும் வகையில் தான் ஒளிவிளக்கு திருநாளாக தீபாவளி வருடா வருடம் கொண்டாடப்படுகின்றது.
கிருஸ்ணர் நரகாசுரன் என்ற அசுரனை அவனது கொடுமைகள், இம்சைகள் தாங்காது கொன்று அழிக்கின்றான். அந்த நேரத்தில் நரகாசுரன் ஒரு வரம் கேட்கின்றான். பல கொடுமைகள் புரிந்த தீயவன் நான் சாகும் இந்த நாளை மக்கள் எப்போதும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்று வரமாக கேட்டான். தீயவன் ஒருவனின் அழிவில் மகிழ்வுற்ற மக்கள் அன்று கொண்டாடிய கொண்டாட்டமே இன்றும் தீபாவளியாக கொண்டாடப்படுவதாகக் கருதப்படுகின்றது.
அந்த வகையில் இந்த தீபத்திருநாள் இன்னல்கள் அனைத்தையும் நீக்கி அனைவரின் வாழ்விலும் சுபீட்சத்தை ஏற்படுத்த வேண்டும் என தீவகத்தின் செய்திப் பிரிவு வாழ்த்துகிறது.