உலகக் கிண்ணப் போட்டியின் போது இலங்கை அணிக்கு அச்சுறுத்தல் அல்லது வெளி அழுத்தங்கள் எதுவும் இல்லை என இலங்கை அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
ஐசிசி உலகக்கிண்ண போட்டித் தொடரில் தோல்வியடைந்த இலங்கை அணி நேற்று முன்தினம் நாட்டை வந்தடைந்தது.
இலங்கை அணியும் சர்ச்சையும்
இந்தநிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் தொடர் தோல்விகள் மற்றும் இலங்கை கிரிக்கெட் சபை தொடர்பில் பல சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தன.
கிரிக்கெட் அணி வீரர்கள் மீதும் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.
இவ்வாறான நிலையில் இவற்றிற்கு விளக்கமளிக்கும் வகையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இன்று காலை விசேட செய்தியாளர் சந்திப்பு இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே இலங்கை அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் கிரிக்கெட்டை நேசிக்கும் மக்களிடம் இலங்கை அணி மன்னிப்பு கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.