Loading...
அரசாங்கத்தின் புதிய தீர்மானம் தொடர்பில் அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டு போர் கப்பல்கள்,விமானங்கள் மற்றும் ஆராய்ச்சி கப்பல்களுக்கு இராஜதந்திர அனுமதி வழங்குவதற்கான நிலையான இயக்க நடைமுறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை அங்கீகாரம்
இதேவேளை குறித்த விடயம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் புதுப்பிப்புகள் தொடர்பில் வெளிநாட்டு தூதரகங்களுக்கு அறிவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Loading...
இதற்கான அமைச்சரவை அங்கீகாரமும் அண்மையில் கிடைத்ததாக வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இது தொடர்பில் இலங்கையுடன் இணைந்து செயற்படும் அனைத்து நாடுகளுக்கும் பல்வேறு தரப்பினருக்கும் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Loading...