Loading...
இந்திய கிரிக்கெட் சபையின் செயலாளர் ஜெய் ஷா மீது இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகளுக்கும் ஜெய் ஷாவுக்கும் உள்ள தொடர்பு காரணமாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தை நசுக்கி, தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம் என்ற எண்ணத்தில் உள்ளதாக ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.
Loading...
இலங்கை கிரிக்கெட்டின் நிலை
மேலும்,ஜெய் ஷாவே, இலங்கை கிரிக்கெட்டை நடத்தி வருகிறார். ஜெய் ஷாவின் அழுத்தத்தால் இலங்கை கிரிக்கெட் அழிந்து வருகிறது.
அவரது தந்தை அமித் ஷா இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருப்பதால் ஜெய் ஷா ஒரு சக்திவாய்ந்தவராக செயற்படுகிறார் என்றும் அர்ஜூண ரணதுங்க குற்றம் சாட்டியுள்ளார்.
Loading...