இன்றைய காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் உருவாகி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கம் காரணமாக நாட்டைச் சூழவுள்ள தாழ்வான வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை தொடர்ந்தும் நீடிப்பதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்று (14) பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என குறிப்பிட்டுள்ளது.
மக்களுக்கான அறிவிப்பு
மேலும் மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, மத்திய, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீற்றர் அளவில் கடும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வடக்கு, வடமேற்கு, மேற்கு மற்றும் தென் மாகாணங்களின் கரையோர பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.