கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட வீதிகளின் இருபுறமும் உள்ள சுமார் 300 மரங்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக 15 மாவட்டங்களின் 158 பிரதேச செயலகப் பிரிவுகளில் 9 ஆயிரத்து 280 குடும்பங்களைச் சேர்ந்த 34 ஆயிரத்து 348 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 550 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 951 பேர் நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள 29 பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பிராந்தியத்தில் தாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று உருவாகியுள்ளதன் காரணமாக நாட்டிற்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் தளம்பல் நிலையானது தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளதாக சிரேஷ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார்.