நடிகர் ராகவா லாரன்ஸ் ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்றபோது, மூன்றாம் நாள் அந்த போராட்ட களத்திற்கு என்ட்ரி கொடுத்தார். அங்கு வந்தவர் போராட்டக்காரர்களின் சாப்பாட்டு செலவுக்கு 1 கோடி ரூபாய் அறிவித்தார்.
போராட்டத்தின் நிறைவு நாள் கொஞ்சம் வன்முறை நடந்தது. அப்போது நடந்த பிரஸ் மீட்டுகளில் என் பொண்டாட்டி செயினை வச்சி சோறு போட்டேன்னு சொன்னார். அது கொஞ்சம் சர்ச்சைக்கு ஆளானது.
இந்த சூழலில், புதுக்கோட்டை நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெறுகிறது. லட்சக்கணக்கில் மக்கள் திரண்டு உள்ளனர்.
இந்த போராட்டத்தில் நடிகர்கள் யாரும் சோறு போடவேண்டாம் என்று தீர்மானம் வைத்துள்ளார்களாம்.
இந்த சூழலில், நடிகர் லாரன்ஸ் இன்று நெடுவாசலுக்காக உண்ணாவிரதத்தை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடத்துவதாக இருந்தது. அந்த பதிவை கண்டதும், பலர் வாழ்த்துக்களும்,பலர் கமெண்டுகளை போட்டு லாரன்ஸை திக்குமுக்காட வைத்து விட்டனர்.
உங்க பொங்க சோறும் வேணாம்; பூசாரித்தனமும் வேணாம் என்றும், எத்தனை கோடி அறிவிக்க போறீங்கன்னும், ஜல்லிக்கட்டில் செலவு பண்ண ஒரு கோடிக்கே இன்னும் கணக்கு இல்லை என்றும் சொல்லியுள்ளார்கள்.