மேலூர் மலம்பட்டி கதிரேசன்- மீனாட்சி தம்பதிகள், நடிகர் தனுஷ் தான் அவர்களின் மூத்த மகன் கலைச்செல்வன் என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.
இந்த வழக்கு ஆதாரமற்றது என்று தள்ளுபடி செய்ய தனுஷின் சார்பாக வழக்கு பதிவு செய்யப்பட்ட போதிலும், கதிரேசன் தனுஷின் மார்க் சீட் என்று தாக்கல் செய்த 10 ம் வகுப்பு மார்க் சீட்டில் குறிக்கப்பட்டு இருந்த அங்க அடையாளங்கள் தனுஷின் உடலில் இருக்கிறதா? என்று சரிபார்க்க நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில், தனுஷ் நேரில் ஆஜர் ஆனார்.
ஆனால், இதை செய்ய அரசு மருத்துவர்கள் பலரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் கேட்டும், எல்லோரும் இது சென்சிடிவ் கேஸ் என்று பயந்ததால், டீனே, அடையாளங்கள் மார்க் சீட் படி இருக்கிறதா? அல்லது ஆப்ரேசன் செய்யப்பட்டு இருக்கிறதா? என்று ஆய்வு செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
தனுஷுக்கு மரபணு சோதனை செய்யவேண்டும் என்றும் புதிய மனு தாக்கல் ஆகி உள்ளது.