இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (15) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 322 ரூபா 58 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 332 ரூபா 98 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 401 ரூபா 63 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 417 ரூபா 54 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 349 ரூபா 18 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 364 ரூபா 18 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 234 ரூபா 16 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 244 ரூபா 76 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 207 ரூபா 94 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 218 ரூபா 32 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 237 ரூபா 94 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 248 ரூபா 49 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
வங்கிகளில் இன்றைய நிலவரம்
அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.
அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 321.43 ரூபாயிலிருந்து 322.17 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 332.63 ரூபாயிலிருந்து 333.39 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 320.76 ரூபாயிலிருந்து 321.75 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 331 ரூபாயிலிருந்து 332 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே 322 ரூபாயிலிருந்து 323 ரூபாய் மற்றும் 332 ரூபாயிலிருந்து 333 ரூபாயாகவும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.