Loading...
தனுஷ் தங்களது பிள்ளை என்றும் மாதா மாதம் பராமரிப்புச் செலவிற்கு பணம் வழங்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேலூரைச் சேர்ந்த தம்பதி வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இறுதிகட்ட வாதத்தின் போது, தனுஷுக்கு டி.என்.ஏ பரிசோதனை நடத்த வேண்டும் என அந்த தம்பதி சார்பில் ஒரு கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
Loading...
இதுபற்றி கருத்து தெரிவித்த நீதிபதி ஜி. சொக்கலிங்கம், இது சரியானதல்ல என்றும், இத்தனை நாள் விட்டுவிட்டு இப்போது ஏன் மனுத் தாக்கல் செய்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.
மேலும் வெள்ளிக்கிழமையுடன் (நாளை) தான் ஓய்வு பெற உள்ளதால் வழக்கு நடைமுறைகளை நிறுத்தி வைப்பதாகவும், புதிய நீதிபதி வழக்கை தொடர்ந்து பரிசீலிப்பார் என்றும் கூறியுள்ளார்.
Loading...