Loading...
யாழ் இந்து மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மாணவி ஜெராட் அமல்ராஜ் வனிஷ்கா என்ற மாணவி புலமைப் பரிசில் பரீட்சையில் 196 புள்ளிகளைப் பெற்று யாழ் மாவட்டத்திலேயே அதிக புள்ளியைப் பெற்றவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
Loading...
இது குறித்து அப்பாடசாலையின் அதிபர் ‘சிவந்தினி வாகீசன்‘ கருத்துத் தெரிவிக்கையில்“ 2023 ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு எமது கல்லூரியில் இருந்து 110மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 35 மாணவர்கள் பரீட்சையில் சித்தி அடைந்து கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர். அதிலும் வரலாற்றில் முதன்முதலாக யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிக புள்ளிகளை பெற்று எங்கள் பாடசாலை மாணவி பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளமை மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Loading...