வருங்கால தேவையின் போக்கிற்கு ஏற்ப, கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க பரிசீலித்து வருவதாக ஒபெக் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
அடுத்த ஒபெக் கூட்டத்தொடர் நவம்பர் 26ம் திகதி நடைபெறும் என்றும், குறித்த கூட்டத்திற்கு பிறகு இது தொடர்பிலான இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் , எரிபொருள் விலையை நிலையானதாக வைத்திருப்பதற்காக எதிர்காலத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.
எரிபொருள் விலை
இலங்கையில் இறுதியாக இம்மாதம் முதலாம் திகதி(01.11.2023) எரிபொருள் விலையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 9 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலை 356 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை 423 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
விலை அதிகரிப்பு
இதன்படி, ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, ஒட்டோ டீசல் 356 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, ஒரு லீட்டர் சுப்பர் டீசல் 431 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றின் விலை 7 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 249 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.