தற்போதைய பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு மூன்றாவது தடவையாகவும் சேவையை நீடிக்க தீர்மானிக்கப்பட்டதுடன், அது நவம்பர் 03 ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்தது.
இதன்படி, 03 வாரங்களுக்கு இந்த சேவை நீடிப்பு வழங்கப்பட்டதுடன், இதுவரை 04 தடவைகள் அவருக்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், திரு.சி.டி.விக்ரமரத்னவின் சேவை நீடிப்புக்கு அரசியலமைப்பு பேரவை உறுப்பினர்கள் அங்கீகாரம் வழங்க மறுத்தமையினால் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் அரசியலமைப்பு சபையில் சில பிளவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசியலமைப்பு பேரவை நேற்று (18) கூடியதுடன், பொலிஸ் மா அதிபரின் சேவை நீடிப்பு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், தற்போதைய பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு மேலும் நீடிப்பு வழங்கப்படுவதா அல்லது இந்த சேவை நீடிப்பின் பின்னர் புதிய பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்படுவாரா என்பது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் மா அதிபர் பதவிக்கு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் பலர் இருந்தும், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனின் பெயரை பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலசஸ் அடுத்த ஐஜிபி பதவிக்கு பரிந்துரைத்துள்ளமையால் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது