ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்ட இஸ்ரேலிய படையைச் சேர்ந்த 19 வயது பெண்ணின் உடல், காசா பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய பாதுகாப்புப் படை இது குறித்து தனது எக்ஸ் தளத்தில்,
இஸ்ரேலிய படை வீரர்
“19 வயதான நோவா மார்சியானோ என்ற பெண் இஸ்ரேலிய படை வீரர் ஆவார். ஒக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
காசாவில் உள்ள ஷிஃபா மருத்துவமனைக்கு அருகில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அவரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களுக்கு தொடர்ந்து உறுதுணையாக இருப்போம்” எனத் தெரிவித்துள்ளது.
இடைவிடாமல் காசா மீது குண்டுவீச்சு
இஸ்ரேல் – ஹமாஸ் போர் ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து வருகிறது.
ஹமாஸின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் இடைவிடாமல் காசா மீது குண்டுவீசி வருகிறது. இதுவரை 12,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கின்றனர், இதில் 4,700-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர்.