Loading...
உலகின் மிகப்பெரிய சுற்றுலா கப்பல்களின் ஒன்றான Celebrity Edge’ எனும் அதிசொகுசு பயணிகள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்தியாவின் கொச்சியில் இருந்து 2,780 பயணிகளுடன் குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
Loading...
அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 1,273 பணியாளர்கள் இந்த கப்பலில் பணியாற்றுவதாக தெரிவிக்கப்படுகிறது.
306 மீட்டர் நீளமுள்ள இந்த கப்பல் 15 தளங்கள் மற்றும் நவீன வசதிகளைக் கொண்டுள்ளது. நவம்பர் 13 ஆம் திகதி டுபாயில் இருந்து புறப்பட்ட கப்பல் நவம்பர் 16 ஆம் திகதி மும்பையை சென்றடைந்துள்ளது.
Loading...