சர்வதேச கிரிக்கட் பேரவையினால் இலங்கை கிரிக்கெட் அணிக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் நேற்று (19) வெளியிட்ட அறிக்கைகள் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று (20) அறிவித்தலை விடுத்துள்ளது.
சர்வதேச கிரிக்கட் பேரவையின் அரசியலமைப்பின் பிரகாரம், அரசாங்கத்தின் செல்வாக்கு இன்றி ஸ்ரீலங்கா கிரிக்கட் சுயாதீனமாக செயற்படுவது அவசியமானது எனவும், அனைத்துப் பணிப்பாளர்களின் பங்குபற்றுதலுடன் கூடிய கூட்டத்தில் உரிய தீர்மானத்தை சபை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அவ்வாறானதொரு தடையை கோரியதாக அமைச்சர் முன்வைத்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ள கிரிக்கட் சம்மேளனம், குறித்த தடையை விரைவில் நீக்குவதற்கு எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு தற்போதுள்ள சட்ட நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டு, ஊடகங்கள் மூலம் பொதுமக்களின் கருத்தை தாக்கி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து இலங்கை கிரிக்கெட்டின் கட்டுப்பாட்டை அமைச்சர் கைப்பற்றியதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் குற்றம் சாட்டியுள்ளது.