Loading...
ஜப்பானில் இலங்கை இளைஞன் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்
ஜப்பானில் இலங்கையை சேர்ந்த இரு குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக அப்பாவி இளைஞன் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
மாத்தறையை சேர்ந்த 26 வயதான ஷாலிந்த என்ற இளைஞனே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Loading...
இளைஞன் கொலை
கடந்த மாதம் 15ஆம் திகதி இலங்கையை சேர்ந்த குழுவொன்றுடன் ஏற்பட்ட மோதலையடுத்து கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.
படுகாயமடைந்த நிலையில் ஜப்பானில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார்.
கடுமையான குடும்ப வறுமையில் சிக்கி தவித்த ஷாலிந்தவின் பெற்றோர் கடனிற்கு பணம் பெற்று மகனை ஜப்பானிற்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Loading...