Loading...
நாடாளுமன்றத்தில் நேற்று முறைகேடாக நடந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த இரண்டு வாரங்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமான குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றில் நேற்று உரையாற்றியிருந்தார்.
Loading...
இதன்போது குறுக்கிட்ட சனத் நிஷாந்த உள்ளிட்ட ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரை பேசவிடாமல் இடையூறு விளைவித்திருந்தனர்.
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த நாடாளுமன்றத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட காரணத்தால் இன்று முதல் 2 வார காலத்திற்கு நாடாளுமன்றத்தில் இருந்து இடைநிறுத்துவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
Loading...