Loading...
அரசாங்கத்தின் பிழைகளை மாத்திரமே ஊடகங்கள் சுட்டிக்காட்டுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார்.
கொலன்னாவையில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போதே ஜனாதிபதி இந்த விடயங்களை கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் நோக்கம் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதே என்ற நிலையில் ஊடகங்கள் வாய்ப்பற்ற விடயங்களை மாத்திரமே சுட்டிக்காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
Loading...
நடைமுறை அரசாங்கத்தின் கொள்கை நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்
ஒவ்வொரு அரசாங்கமும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை நியாய விலைகளிலேயே கொடுப்பதற்கு விரும்பும், எனினும் முன்னைய ஆட்சியாளர்களின் தனிப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக இன்று அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Loading...