அம்பாந்தோட்டையில் மிகவும் நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய சிறைச்சாலையை திறந்து வைக்குமாறு சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எனினும் அந்த நிகழ்வில் தான் கலந்து கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளதாக மைத்திரி தெரிவித்துள்ளார்.
கேகாலை பாடசாலை ஒன்றில் நேற்று முன் தினம் (1) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மைத்திரி இவ்வாறு கூறியுள்ளார்.
சகல வசதிகளையும் கொண்ட இலங்கையின் நவீன சிறைச்சாலையை திறந்து வைக்குமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும் அவ்வாறான நிகழ்வில் கலந்து கொள்ள விரும்பவில்லை என மறுத்து விட்டேன்
மிகவும் அழகான சிறைச்சாலை, அனைத்து வசதிகளும் உண்டு, பாரிய அளவு பணம் செலவிடப்பட்டுள்ளது. இதனால் நீங்கள் கண்டிப்பாக அம்பாந்தோட்டைக்கு வர வேண்டும் என கூறினார்கள்.
சிறைச்சாலைகளை திறப்பதற்கு என்னால் வர முடியாது, பாடசாலை எதுவும் திறக்க வேண்டும் என்றால் கூறுங்கள் வருகின்றேன்.
சிறைச்சாலைகளை மூடிவிட்டு பாடசாலைகளை திறக்கும் நாடு ஒன்றே எங்களுக்கு அவசியம் என மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.