2024ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு அமைச்சின் செலவுத்தலைப்பு 68 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான இரண்டாம்நாள் விவாதம் நேற்று(23.11.2023) நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
பாதுகாப்பு அமைச்சின் செலவுத்தலைப்பு மீதான விவாதமாக நேற்றைய விவாதம் காணப்பட்டது.
ஆதரவாக 76 வாக்குகள்
இந்நிலையில் விவாதம் நிறைவடைந்ததும் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பை தமிழ் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரியிருந்தார்.
அதன் பிரகாரம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பாதுகாப்பு அமைச்சின் செலவுத்தலைப்புக்கு ஆதரவாக 76 வாக்குகளும் எதிராக 08 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதன்மூலம் 68 மேலதிக வாக்குகளால் பாதுகாப்பு அமைச்சுக்கான செலவுத்தலைப்பு நிறைவேற்றப்பட்டது.