Loading...
பிலிப்பைன்ஸில் நடைபெற்ற National Masters & Seniors Athletics
போட்டியில் இலங்கையைச் சேர்ந்த 72 வயதான அகிலத்திருநாயகி 2 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
குறித்த போட்டியில் இவர் 1500m ஓட்டம் , 5000m விரைவு நடை போட்டியில் தங்கப் பதக்கமும் 800m ஓட்டத்தில் வெண்கலப் பதக்கமும் 5000m ஓட்டத்தில் நான்காம் இடத்தையும் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...
முல்லைத்தீவு – முள்ளியவளையைச் சேர்ந்த இவர் ஓய்வு பெற்ற சிறைச்சாலை உத்தியோகத்தர் எனக் கூறப்படுகின்றது.
அதுமட்டுமல்லாமல் இதற்கு முன்னரும் இவர் பல சர்வதேச ,உள்நாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு தங்கப்பதக்கங்கள் உட்பட பல பதக்கங்களை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...