எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராகவும், ரஞ்சித் மத்தும பண்டார பொதுச் செயலாளராகவும் செயற்படுவதைத் தடுக்குமாறு கோரிய இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் மனுவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, பெயர் மாற்றம் பெற்றுள்ள ஐக்கிய மக்கள் சக்தியானது, தமக்கு சொந்தமானக் கட்சியென பல சந்தர்ப்பங்களில் கூறியுள்ளதுடன், கட்சியை கைப்பற்ற பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டிருந்தார்.
என்றாலும், அரசாங்கத்துக்கு ஆதரவளித்தமையால் டயானா கமகேவின் உறுப்புரிமையை ஐக்கிய மக்கள் சக்தி பறித்தது.
இந்நிலையில், கட்சியின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, வழக்கொன்றை தாக்கல் செய்திருந்த போதிலும் அதனை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.