அதிக மன அழுத்தம் காரணமாக கடுமையான தலைவலி பிரச்சனைகள் சிலருக்கு ஏற்படும். ஆனால் அதுவே கொஞ்சம் நாள்பட்ட தலைவலியாக இருந்தால், அதற்கு பல்வேறு உடல் ரீதியான பிரச்சனைகள் உள்ளது.
அதிலும் , கண், பின்புற தலை, தலையை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக வலி ஏற்பட்டால் அதனை ஒருபோதும் அலட்சியப்படுத்தக்கூடாது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏனெனில் இந்த வலியானது, மூளையில் கட்டி, மூளைக் கசிவு மற்றும் மூளைக்காய்சல் இது போன்ற நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம்.
அதுமட்டுமின்றி, நாளடைவில் இந்த வலியானது தீவிர தலைவலிக்கு வழிவகுக்கும் என்பதால் இதனை அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை பார்த்து ஆலோசனை பெறுவது மிகவும் நல்லது.
மேலும் இது குறித்து ஒருசில ஆபத்தான அறிகுறிகள் தென்பட்டால் அதை தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும். அந்த அறிகுறிகளை பற்றி தெரிந்துக் கொள்வோம்.
தலைவலியின் ஆபத்தான அறிகுறிகள் என்ன?
- தினமும் அதிக நேரம் கண்களுக்கு வேலை கொடுப்பதால், கண்களில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் கடுமையான தலைவலி பிரச்சனைகள் ஏற்படும்.
- நாம் உட்காரும் போது, நமது கழுத்தின் பின் பகுதி மற்றும் முதுகுத்தண்டுப் பகுதியில் கடுமையான வலியை உணரக் கூடும்.
- அதிகப்படியான தலைவலி மற்றும் இடுப்பு வலி காரணமாக சில நேரங்களில் வாந்தி மற்றும் வயிற்று குமட்டல் போன்ற பிரச்சனைகளைக் கூட ஏற்படுத்தும்.
- தலைவலி அதிகமாக இருப்பதால், சிலருக்கு கடுமையான காய்ச்சல், சளி போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கு கூட அதிக வாய்ப்புகள் உள்ளது.
- அன்றாடம் நமது செய்யும் செயல்கள் மற்றும் நடந்துக் கொள்ளும் விதங்களில் அதிக மாற்றங்கள் ஏற்படும். அதிலும் சிலர் அதிகப்படியான கோபம், மன உளைச்சலுக்கு ஆளாவார்கள்.
குறிப்பு
மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் தென்பட்டால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில் இது மூளை தொடர்பான நோயாக கூட இருக்கலாம்.