Loading...
மொனராகலை மாவட்டத்தின் பலஹருவ, குடோ ஓயா பாயும் அளுத்வெல பாலத்தின் மீது மோட்டார் சைக்கிளை செலுத்திய போது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நபரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து சற்று தொலைவில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹப்புத்தளையில் வசிப்பவர்
நீரில் மூழ்கி உயிரிழந்தவர் ஹப்புத்தளை பிரதேசத்தில் வசிக்கும் உமாஓயா திட்டத்தில் பணிபுரியும் பணித்தள மேற்பார்வையாளர் ஆவார்.
Loading...
உயிரிழந்தவரின் சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை கொஸ்லந்த காவல் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Loading...