Loading...
நாட்டிலுள்ள 452 லங்கா சதொச விற்பனை நிலையங்களில் 193 விற்பனை நிலையங்கள் நஷ்டம் அடைந்துள்ளமை தெரியவந்துள்ளதாக கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2022ஆம் ஆண்டு தொடர்பான கணக்காய்வாளர் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
கடந்த ஆண்டில் லங்கா சதொச நிறுவனத்திற்கு ஏற்பட்ட இழப்பு 288 மில்லியன் ரூபா என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
எவ்வாறாயினும், இவ்வருடத்தின் கடந்த 10 மாதங்களில் லங்கா சதொச இலாபம் ஈட்டியுள்ளதாக அதன் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
Loading...