இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பதிவை இடைநிறுத்தி, அதன் விவகாரங்களை நிர்வகிப்பதற்காக இடைக்கால கட்டுப்பாட்டு குழுவை நியமித்த விளையாட்டுத்துறை அமைச்சரின் தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான மேலதிக பரிசீலனை நாளை (28) வரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த மனுவை இன்று (27) சோபித ராஜகருணா மற்றும் டி. என். சமரகோன் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இன்று மீள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
குறித்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் இடைக்கால கட்டுப்பாட்டு குழுவின் தலைவர் அர்ஜுன ரணதுங்க உள்ளிட்ட இடைக்கால குழு உறுப்பினர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலி பீரிஸ் நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்தார். இதையடுத்து, அடுத்தகட்ட விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வாவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.