Loading...
நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக ராஜபக்ச மின்தூக்கியில் சிக்கிக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான குணதிலக ராஜபக்ஷ மற்றும் அவரது இரண்டு மெய்ப்பாதுகாவலர்களும் பயணித்த கண்டி மாவட்டச் செயலகத்தில் மின்தூக்கி திடீரென பழுதடைந்துள்ளது.
Loading...
அவர்கள் அதற்கு சுமார் 25 நிமிடங்களுக்குள் சிக்கிக் கொண்டிருந்த நிலையில் தீவிர முயற்சியின் பின்னர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
மாவட்ட செயலகத்தில் பணிபுரியும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மிகுந்த பிரயத்தனத்துடன் அவர்களை வெளியே எடுப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.
Loading...