Loading...
பாணந்துறையில் கடலில் குதித்து உயிரை மாய்க்க முயன்ற சிறுமியை பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர் காப்பாற்றியுள்ளனர்.
நேற்று காலை பாணந்துறை கடற்கரைக்கு வந்த சிறுமி ஒருவர் கடலில் குதித்து உயிரை மாய்க்க முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்போது, பாணந்துறை பொலிஸ் உயிர்காப்பு பிரிவின் உத்தியோகத்தர் உடனடியாகத் தலையிட்டு அவரது உயிரைக் காப்பாற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Loading...
கொஸ்பலான பொல்பிதிமூகலனையில் வசிக்கும் 15 வயதுடைய சிறுமியே இவ்வாறு முயன்றுள்ளார்.
சிறுமியை அவரது தாயிடம் ஒப்படைக்க பொலிஸார் ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...