பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள கடற்படை மற்றும் இராணுவ புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்கள் இந்த அச்சுறுத்தலை எதிர்நோக்கி வருகின்றனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்த உத்தியோகத்தர்கள் பல்வேறு முக்கிய கடமைகளை ஆற்றியவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த உத்தியோகத்தர்கள் பற்றிய விபரங்கள் வெளியாகியுள்ளது.
வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் புலம்பெயர் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில், இராணுவப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு படைத்தரப்பு பாதுகாப்பு வழங்குவதனை நிறுத்திக் கொண்டுள்ளது.
இதுவரை காலம் வழங்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ துப்பாக்கிகளும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
பிணையில் விடுதலை செய்யப்பட்ட புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்கள் அந்தப் பிரிவுகளிலிருந்து நீக்கப்பட்டு சாதாரண படைப் பிரிவுகளில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனால் அவர்களுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகளும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.