இலங்கை மற்றும் பாரிஸ் கிளப்பின் இணைத்தலைமையை கொண்டிருக்கும் இந்தியா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் உத்தியோகபூர்வ கடன் குழு, கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் ஒன்றுக்கு இணங்கியுள்ளதாக பரிஸ் கிளப் செயலகம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையிலான விரிவாக்கப்பட்ட நிதி வச்தி ஏற்பாட்டுடன் ஒத்துப்போகும் கடன் சிகிச்சையின் முக்கிய அளவுருக்கள் தொடர்பில், பாரிஸ் கிளப்பும், இலங்கையும் இணங்கிக்கொண்டதாக அந்த செயலகம் குறிப்பிட்டுள்ளது.
நாணய நிதிய நிர்வாகக் குழு
இந்த இணக்கப்பாடானது, சர்வதேச நாணய நிதிய பணியாளர்களை, நாணய நிதிய நிர்வாகக் குழுவிடம் இலங்கையின் கடன் வசதி ஏற்பாட்டின் முதல் மதிப்பாய்வை முன்வைக்க அனுமதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் இந்த ஏற்பாட்டின் கீழ் இரண்டாவது நிதியளிப்பு ஒப்புதலுக்கான வழியைத் திறக்கும் என்று பாரிஸ் கிளப் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.