Loading...
“யாழில் மலையகத்தை உணர்வோம்” என்ற தொனிப்பொருளிலான நிகழ்வு இன்றைய தினம் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் ஆரம்பமாகியுள்ளது. இந்த நிகழ்வு எதிர்வரும் 3ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
யாழ் சிவில் அமைப்புகள், கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் இந்த நிகழ்வில் வட மாகாண கல்விப் பணிப்பளர் ஜோன் குயின்ரஸ், யாழ் மாவட்ட முன்னாள் செயலர் நா.வேதநாயகன், கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பி.முத்துலிங்கம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Loading...
இதேவேளை குறித்த மண்டபத்தில் மலையக மக்களின் கடந்தகால மற்றும் தற்போதய வாழ்வியலை உணர்த்தும் கண்காட்சியொன்றும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Loading...