ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவிக்கு வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றுமொரு நபருக்கு மாற்றப்பட்டுள்ளதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
குறித்த பாதுகாப்பு ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்கவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மெய்ப்பாதுகாவலர் இன்றி ஜனாதிபதியின் மனைவி பல்வேறு நிகழ்வுகளில் பங்குபற்றுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் சாகல ரத்நாயக்க ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவின் பாதுகாப்பில் பயணிப்பதாக அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி பாதுகாப்பு
சாகல ரத்நாயக்க கலந்துகொள்ளும் வைபவத்திற்கு முன்னதாக ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவினர் அங்கு வந்து நிலைமைகளை ஆய்வுகளை மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி வருகை தரும் போது முன்னெடுக்கும் அதே வகையான பாதுகாப்பை உறுதிப்படுத்துவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இணைய சேவை ஒன்றுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.