Loading...
வெள்ளவத்தை பகுதியில் தொடருந்தில் மோதுண்டு இந்திய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
57 வயதான இந்திய பிரஜை ஒருவரே நேற்று (01.12.2023) பிற்பகல் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தியர் பலி
இவர் தனது மனைவியுடன் கரையோர தொடருந்து பாதையில் பயணித்த போது தெகிவளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்தில் மோதி உயிரிழந்துள்ளார்.
Loading...
படுகாயமடைந்த அவர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...