Loading...
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை, இலங்கைக்கான 48 மாத விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் முதல் மீளாய்வை டிசம்பர் 12 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளது.
உலகளாவிய கடன் வழங்குபவரான சர்வதேச நாணய நிதிய நிறைவேற்று சபையின் நாட்காட்டியில் இது குறிப்பிடப்பட்டுள்ளது,
இலங்கையில் நீடிக்கப்பட்ட ஏற்பாட்டின், நிதி உத்தரவாதங்கள் மறுஆய்வு மற்றும் அணுகலை மறுசீரமைத்தல் போன்ற விடயங்கள்; பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
Loading...
முன்னதாக இலங்கை, தமது மிகப்பெரிய இருதரப்புக் கடனாளியான சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி (எக்சிம்) வங்கி மற்றும் அதன் கடன்களை மறுசீரமைப்பதற்காக உத்தியோகபூர்வ கடனாளர் குழுவுடன் கொள்கை ரீதியான ஒப்பந்தங்களை எட்டியுள்ளது.
இதன்படி சுமார் 9 பில்லியன் டொலர்கள் மறுசீரமைக்கப்படுகின்றன.
Loading...