இராணுவத்திடம் இருக்கும் காணிகளை விடுவிக்கக் கோரி கேப்பாப்புலவு பொதுமக்கள் இன்று மூன்றாவது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
கேப்பாப்புலவு மக்களின் கோரிக்கையினை ஏற்று இராணுவம் இம்மக்களின் காணியை அண்மையில் விடுவித்திருந்தது.
இருப்பினும் குறிப்பிட்ட சில காணிகளே விடுவிக்கப்பட்டதாகவும், மேலும் இராணுவத்திடம் இருக்கும் காணிகளை விடுவிக்கக் கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
கேப்பாப்புலவை சேர்ந்த 135 குடும்பங்கள் தமக்குச் சொந்தமான 480 காணிகளையும் இராணுவத்தினர் தங்களிடம் கையளிக்க வேண்டும் எனக் கோரியே இந்த போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இராணுவத்தினர் தமது போராட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் செயற்பட முனைவதாகவும் இதனால் தமது போராட்டத்தினை இன்று மேலும் வழுப்படுத்தவுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.