விரிவடையும் பொருளாதாரத்திற்குள் 2024ஆம் ஆண்டளவில் இலங்கை பிரவேசிக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அதன்படி, புதிய வரிச்சுமை குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2024ஆம் ஆண்டில் VAT வரி 24% ஆக அதிகரிக்கும் என சில தரப்பினர் முன்வைத்துள்ள கணிப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார நிலை குறித்து கணிப்புகள்
அவர் மேலும் கூறுகையில், பல்வேறு தரப்பினரும் எதிர்வரும் வருடத்தின் பொருளாதார நிலை குறித்து எதிர்மறையான கோணத்தில் கணிப்புகளை மேற்கொள்கின்றனர்.
ஆனால் பொருளாதாரத்தை முற்றிலும் எதிர்மறையாகவோ அல்லது நேர்மறையாகவோ பார்க்காமல் நடுநிலையாக பார்க்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, பெறுமதி சேர் வரியில் (VAT) இருந்து விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளின் பட்டியலை நிதி அமைச்சு அடுத்த மாதம் வெளியிடும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.