இலங்கைக்கு இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 1.2 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகைத்தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த வருட இறுதிக்குள் 1.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைத்தருவார்கள் என எதிர்ப்பாத்துள்ளதாகவும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
சுற்றுலாப்பயணிகளின் வருகை
அத்துடன், கடந்த நவம்பர் மாதம் சுற்றுலாப்பயணிகளின் வருகை காரணமாக 1.75 பில்லியன் ரூபாய் வருமானமாக கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இலங்கைக்கு ரஷ்யா, ஜெர்மனி, பிரிட்டன், அவுஸ்திரேலியா, சீனா, அமெரிக்கா, பிரான்ஸ், போலந்து, ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.