வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க கோரி அண்மைக்காலமாக போராட்டங்கள் தொடர்ந்த வண்ணமுள்ளன.
இந்நிலையில் இப்போராட்டம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் வேலை இல்லா பிரச்சினை தொடர்பாக எனது முக நூலில்தங்களுக்கு உதவி செய்யும்படி அனுப்பப்பட்ட குறும் செய்தி கிடைக்கப்பெற்றது.
பட்டதாரிகளின் வேலையில்லா பிரச்சனை கட்டாயம் தீர்க்கப்படவேண்டும். இதற்கான முயற்சிகளில் நான் ஏற்கனவே ஈடுபட்டுள்ளேன்.
குறிப்பாக வடமாகாண இளைஞர் யுவதிகளின் வேலையில்லா பிரச்சினை தொடர்பாக கவனம் எடுத்து, கடந்த காலத்திலும் செயற்பட்டிருந்தேன்.
அந்த வகையில் நானும் ஒரு பட்டதாரி என்பதனால் உங்களின் வலிகள் பிரச்சினைகள் தொடர்பாக நான் நன்கு அறிவேன்.
எனது தலைமையில் யாழ். மாவட்ட லங்கா சுதந்திர பட்டதாரிகள் சங்க தலைவர், செயலாளர் கடந்த 28/02/2017 ஆம் திகதி மாலை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடினார்கள்.
இங்கு வடமாகான வேலையிலா பட்டதாரிகளின் நிலைமை தொடர்பாக விரிவாக விளக்கம் அழிக்கப்பட்டது. யாழ். மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர பட்டதாரிகள் சங்க பிரதிநிதிகளுடனும், ஜனாதிபதியுடனும் விரிவான கலந்துரையாடல் நடைபெற உள்ளது.
இதன்போது இவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக ஜனாதிபதிக்கு எடுத்து கூற உள்ளேன்.
அத்துடன் வடமாகாண பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைப்பதற்காக குறுகிய காலப்பகுதியில் எல்லா வேலையில்லா பட்டதாரிகளையும் ஒன்றிணைத்து பட்டதாரிகளின் பிரச்சனைகளின் தீர்வுக்கான பெரும் கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.