Loading...
உலகின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான அமெரிக்காவின் பில் கேட்ஸ் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையிலான சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு துபாயில் உள்ள எக்ஸ்போ சிட்டியில் இன்று (03.12.2023) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
மேலும் தெரியவருகையில்,
Loading...
விசேட கலந்துரையாடல்
துபாயில் உள்ள எக்ஸ்போ சிட்டியில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டின் (COP 28) போதே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்தக் கலந்துரையாடலின் போது இலங்கையின் விவசாய நவீனமயமாக்கல் மற்றும் உணவுப் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கையின் பசுமை முயற்சிகள் குறித்து பில் கேட்ஸிடம் ஜனாதிபதி விளக்கமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Loading...